டெலிகொம் ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் !

டெலிகொம் ஊழியர்கள் தங்களை நிரந்தர அரச பணியில் இணைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இன்று (21) டெலிகொம் தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுவரை டெகொம் ஊழியர்கள் டெலிகொம் தலைமையைத்தின் அருகில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 16-17 வருடங்களாக டெலிகொம் ஊழியர்களாக சேவையாற்றியிருந்தும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனாலேயே அவர்கள் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்தி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு தங்கள் பாரியளவு பங்களிப்பு வழங்கியிருந்தும் அதன் மூலம் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களின் குரலை செவிமடுக்கவில்லையாயின் அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் டெலிகொம் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

tc

tc2

tc4

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top