ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு !

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலமொன்றை, ஹட்டன் பொலிஸார், இன்று (08) காலை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம், ஹட்டன் அலுத்கம பகுதியைச் சேர்ந்த பொண்ணுசாமி கணேஷன் (வயது 47) எனவும் அவர், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ஹட்டன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள உயிரிழந்தவர், ஹட்டன் நகரின் பொதி சுமக்கும் தொழில் ஈடுப்பட்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இவர், சிலரால் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு எதும் காரணங்கள் உள்ளதா என பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top