டிஜிடல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறை திறப்பு !

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அமைய பாடசாலைகளில் டிஜிடல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறைகளை தெரிவு செய்யபட்ட பாடசாலைகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக மாதிரி டிஜிடல் முறையில் கல்வி பயிலும்  வகுப்பறை ஒன்று கல்வி அமைச்சில் இன்று (19 ) கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் திறந்து வைக்கபட்டது.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உட்பட அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள்¸ அனுசரனையாளர்கள் கலந்துக் கொண்டார்கள். தற்போது அமைக்கபட்டிருக்கும் இந்த டிஜிடல் முறையில் கல்வி பயிலும் வகுப்பறைளை மாணவர்கள்¸ ஆசிரியர்கள்¸ அதிபர்கள் பார்வையிடவும் பயன் பெறவும் முடியும். தற்போது நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யபட்ட பாடசாலைகளில் இத்திட்டத்தை அமுல் படுத்த உபகரணங்கள் வழங்கள் உட்பட ஏனைய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது

dt

dt 2

dt 1

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top