காணாமல் செய்தல் குற்றமாக கருதப்பட வேண்டும் - கருத்தரங்கு

இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'நபர்களை காணாமல் செய்தல் குற்றமாக கருதப்பட வேண்டும்' எனும பொதுமக்கள் கருத்தரங்கு இன்று (16) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.


இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவர் கலாநிதி தீபிகா உடகம மற்றும் மஹிந்த அமரவீர, முஜிபுர் ரஹூமான் , எம்.ஏ.சுமந்திரன், விஜித ஹேரத், எம்.எச்.எம் சல்மான் போன்ற அரசியல் பிரதிநிதிகள் இதன் போது கருத்து தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top