குழவி தாக்குதலுக்கு உள்ளாகி 06 பேர்  வைத்தியசாலையில் !

புஸ்ஸல்லாவை, டெல்டா தோட்டம், தெற்கு (பழைய தோட்டம்) பிரிவில், குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்கள் அறுவர்,  புஸ்ஸல்லவை வைத்தியசாலையில் இன்று (19) வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களேஇ இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குறிப்பாக மலைக தோட்ட தொழிலாளர்கள் மீது தற்போது அடிக்கடி இந்த குழவி தாக்குதல் நடைபெற்று வருவதால் தொழிலாள பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்திற் கொண்டு மலையகத்தில் தேயிலை மலைகளில் காணப்படும் அனைத்து குழவி கூடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

IMG 8729

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top