ஸ்டெதன் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

தோட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாக அதிகாரிகளின் உத்தரவிற்கு எதிராக ஹட்டன்  ஸ்டெதன் தோட்ட தொழிலாளர்கள்  ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஸ்டெதன் தோட்டத்தில் இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நாட்களில் மத்திய மலைநாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாள் முழுவதும் முடிந்தளவு பதின்நான்கு கிலோவுக்கு குறைவாகவே பரிக்க முடியும். அவ்வாறு பறிக்காத பட்சத்தில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க தோட்ட நிர்வாகம்  மறுக்கிறதாகவும் தேயிலை மலைகளில் கொழுந்து இல்லாத சந்தர்ப்பங்களில் எம்மால் எவ்வாறு 18 கிலோ கிராம் தேயிலை கொழுந்தை பறிக்க முடியும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வியெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

trade 2

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top