தலவாக்கலை ஒலிரூட் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

 

தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தைச் சேர்ந்த 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (12) தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஒலிரூட் தோட்ட நிர்வாகம், தேயிலை தோட்டங்களை காடுகளாகவிட்டு, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காது, 18 கிலோவுக்கு அதிகமான தேயிலைக் கொழுந்தினை கொய்யுமாறு வலியுறுத்துவதால் ஏற்பட்ட முறுகல் நிலையினால் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


தோட்டத்தின் தேயிலைக்காணிகள் பல, நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியது. ஆனால் தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை நிலங்களை சுத்தம் செய்துகொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை.இருந்தும் நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தேயிலை கொழுந்தை கொய்து தரும்படி தோட்ட நிர்வாக அதிகாரி வலியுறுத்துகிறார். இதனால் தாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  சந்தா பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் இதுகுறித்து உடனடியாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்படுகிறது.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top