1150 x 80 px

 

ரயிலில் மோதுண்ட பெண் வைத்தியசாலையில்

நாவலபிட்டியில் இருந்து நானுஒயாவிற்கு பொருட்கள் ஏற்றி சென்ற ரயிலில் ஹட்டன் மல்லியப்பு 137 தூண் ஒன்றுக்கு அருகாமையில் ரயிலில் மோதுண்ட பெண் ஒருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 04.30 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண் 39வயதுடைய ஹட்டன் காமினிபுர பகுதியை சேர்ந்த நிமாலி எதிரிசிங்க என தெரிவிக்கப்படுகிறது.

இதே ரயில் கடவைக்கு அருகாமையில் உள்ள காவலரன் அரையில் உள்ள உத்தியோகத்தரிடம், குறித்த பெண் தற்போது ரயில்வருகின்ற நேரமா எனவும் இந்த பெண் கேட்டிருந்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தற்கொலை முயற்சியினால் ஏற்பட்டதா அல்லது பெண் தவறுதலாக ரயிலில் மோதுண்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top