1150 x 80 px

 

அளுத்கம வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

களுத்துறை மாவட்டத்தில், பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் 2014 இல் ஏற்பட்ட அனர்த்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவற்றைக் கவனத்திற் கொண்டு, தற்போது காணப்படுகின்ற விதிகளுக்கு அமைவாக, அந்நட்டஈட்டு தொகையினை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்படி பாதிப்புக்களுக்கு நட்டஈட்டு தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கு சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top