முன்னணி ஊடகங்களை சாடும் டொனால்ட் டிரம்ப்

முன்னணி செய்தி ஊடகங்கள் மீதான அதிபர் டிரம்பின் அதிருப்தி வெளிப்பாட்டின் மேலும் ஓர் அறிகுறியாக, இந்தாண்டு வெள்ளை மாளிகை சார்பில் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் விருந்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது, அதிபர் பாரம்பரியமாக, வழக்கத்தை விடுத்து, உற்சாகமாக உரை நிகழ்த்துவது வழக்கம்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி செய்தித்துறையின் ஒரு பிரிவினரை போலி செய்தி என்றும், அமெரிக்க மக்களின் எதிரிகள் என்றும் விமர்சித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிபிசி, சிஎன்என் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் உள்பட பல செய்தி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top