ஐ.நாவின் அமைதிக்கான இளம் தூதர் மலாலா

தற்போது பிரிட்டனில் "ஏ" லெவல் வகுப்புகளில் இருக்கும் 19 வயதாகும் மலாலாவிற்கு, புகழ்பெற்ற பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது; பெண் கல்வியில் சிறப்பு கவனத்தை செலுத்தும் வகையில் மலாலா அந்த வாய்ப்பை ஏற்கவுள்ளார்.

2012 ஆம் ஆண்டு, கல்வி பெறுவதில் பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தாலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா.

நியூ யார்க்கில் பட்டத்தை பெற்று கொண்டு பேசிய மலாலா, "மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்குகிறது, மேலும் அது இப்போதே தொடங்க வேண்டும்". என தெரிவித்தார்.

"உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் யாருக்காகவும் காத்திராமல் தற்போதே செயல்பட தொடங்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

ஐ.நாவின் பொதுச் செயலர் ஆண்டோன் யுகோடேரிஷ், "உலகில் மிக முக்கியமாக கருதப்படும் கல்வியின் சின்னம்" என மலாலாவை புகழ்ந்துள்ளார்.

கடந்த மாதம் தனது "ஏ" லெவல் வகுப்புகளில் மூன்று ஏ க்களை பெறும் பட்சத்தில், அரசியல், தத்துவம், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பயில பிரட்டன் பல்கலைக்கழகம் ஒன்றிடமிருந்து வாய்ப்பு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிட்டனில் எந்த பல்கலைக்கழகம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என அவர் தெரிவிக்கவில்லை.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]kanewsweb.net

Top