பிரித்தானியாவில் அவசர தேர்தல்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் பேச்சுவார்த்தைகளில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள, தனது திட்டதுக்கான ஆதரவினை அதிகரித்துக் கொள்ள வேண்டுமெனக் கூறிய ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, ஜுன் எட்டாம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான அழைப்பை நேற்று (18) விடுத்துள்ளார்.

பிரான்ஸில் இம்மாதமும் அடுத்த மாதமும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், ஜேர்மனியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாண்டு தேர்தலை நடாத்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஐக்கிய இராச்சியமும் இணைந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள், அடுத்த இரண்டு ஆண்டுகள் அளவில் இடம்பெறவுள்ள நிலையில், இத்தேர்தல்களின் முடிகள், இந்தப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்களவு தாக்கம் செலுத்தவுள்ளன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top