பிரித்தானிய சுகாதார சேவை இணையத்தின் மீது சைபர் தாக்குதல்

இன்றையதினம் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைகள் இணையத்தளங்கள் இணையத்திருடர்களால் முடக்கப்பட்டமையினால் மருத்துவமனைகளின் செயற்பாடுகள் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் லண்டன், பிளாக்பர்ன், நொட்டிங்காம், கம்பிரியா மற்றும் ஹெர்ட்போட்ஷைர் ஆகிய பகுதிகளில் மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்த தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ சேவை இணையதளங்கள் முடங்கியதால், அம்புலன்ஸ்களை குறித்த பகுதிகளுக்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன் சில மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுடன் வந்த அம்புலன்ஸ் வண்டிகளை வேறு மருத்துவமனைகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கணணியை இயக்கினால் பிணைத்தொகை வழங்கிளால்தான் கணணி செயற்படும் என திரையில் தோன்றுவதாகவும் இது ஒரு சைபர்தாக்குதலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top