நோபல் பரிசு பெற்றவர் அரசியல் கைதியாகவே மரணம் !

சீனாவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ புற்றுநோய் முற்றிய நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.

சீனாவில் ஜனநாயகம் தொடர்பான 'சார்ட்டெர் 8' என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61),  என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.

ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

இந்நிலையில்இ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லியு சியாபோ, நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top