மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை !

தென்மேற்கு பசிபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் தெற்கு கடல்பகுதியில் இன்று 8 ரிக்டர் அளவில்  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார்123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடையில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரலைகள் எழுவதற்கான ஏற்பட வாய்ப்பு உள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top