வட கொரியாவுக்கு எச்சரிக்கை: பறந்தன அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணுகுண்டுகளையும் ஏவுகணைகளையும் சோதித்துவரும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தனது குண்டுவீச்சு விமானங்களை கொரிய தீபகற்பம் மீது அமெரிக்க பறக்கச் செய்துள்ளது.

இதுகுறித்து பசுபிக் பகுதிகளுக்கான அமெரிக்க விமானப் படைப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'பசிபிக் கடலிலுள்ள குவாம் தீவின் விமானத்தளத்திலிருந்து பி-1பி வகையைச் சேர்ந்த இரு குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை பறக்க விடப்பட்டன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வடகொரிய விவகாரம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ், முப்படைகளின் தளபதி ஜோசப் டன்ஃபோர்ட் உள்ளிட்ட முக்கிய ஆலோசகர்களுடன் அதிபர் டிரம்ப், ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

வடகொரியாவால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top