வியட்நாமில் கடும் வெள்ளம்: 54 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், மழை, வெள்ளத்துக்கு, இதுவரை, 54 பேர் பலியாகிவிட்டனர், 39 பேரை காணவில்லை.

வியட்நாமில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அந்நாட்டில் உள்ள ஆறுகளில், வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு பகுதிகளில், மழைநீர், வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசித்த, பல ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பலத்த மழை காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 54 பேர் பலியாகி உள்ளனர். மேலும், காணாமற்போன 39 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 8,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

நீண்ட கடலோரப் பகுதிகள் உள்ளதால், வியட்நாம் மழை, புயல், வெள்ளத்தால், அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top