1150 x 80 px

 

சிரியாவில் குண்டு வெடிப்பு: 23 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 7 பொதுமக்களும் அடங்குவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த சிரிய மனித உரிமைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இட்லிப் மாகாணத்திலுள்ள கிளர்ச்சியாளர்களின் நிலையத்தை இலக்குவைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அகப்பட்டு 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனவும், அக்குழுவினர் கூறியுள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top