1150 x 80 px

 

சீனா- கம்போடியா இடையே 19 உடன்படிக்கைகள்

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில் சீனா மற்றும் கம்போடியா இடையே 19 நிவாரண மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கம்போடிய மற்றும் சீன பிரதமர்கள் முன்னிலையில், கம்போடிய பிரதமர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) குறித்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அதில் ஒரு உடன்படிக்கை, புதிய விமான நிலையம் மற்றும் நெடுஞ்சாலை அமைத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாக சர்வதேச கம்போடிய முதலீட்டு கூட்டுத்தாபனத்திற்கும், சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கம்போடியாவின் மிகப்பெரிய நிவாரண உதவியாளராக சீனா விளங்குகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

கம்போடியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர், இன்று பிற்பகல் கம்போடிய மன்னரை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top