1150 x 80 px

 

தாய்வானில் நிலநடுக்கம் : நால்வல் பலி : கட்டடம் 45 பாகை சாய்ந்தது

தாய்வானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 225 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நில நடுக்கத்தினால் கட்டமொன்று 45 பாகை சாய்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானின் சுற்றுலா நகரான ஹுவலியன் (Hualien) நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு இன்று (புதன்கிழமை) காலை சென்று அங்குள்ள நிலைமையை அவதானித்த ஜனாதிபதி Tsai Ing-wen, உடனடியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

தாய்வானில் கடந்த 1999ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்திருந்ததுடன், இதனையடுத்து, கடந்த 2006ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 100 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top