Tuesday, December 6, 2022

Latest Posts

சுசில் பிரேமஜயந்தவை விலக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம்

மக்களுக்காக பேசிய இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவியிலிருந்து விலக்கியமையானது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதகிருஸ்னன் தெரிவித்தார்.

புஸ்ஸல்லாவ மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற, முன்னணியின் புஸ்ஸல்லாவ பிரதேச தோட்ட தலைவர்களுக்கான சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டதரணியுமாவார். இலங்கையில் பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், அரசியல் கூட்டணி கட்சிகளின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

நல்ல அரசியல் அனுவபம் உள்ளவர். நாட்டுக்காக பல உன்னத சேவைகளை செய்தவர். இவரை பதவியிலிருந்து விலக்கியது ஒரு கோளைத்தனமான விடயமாகும். இந்த செயற்பாடு தற்போதை அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களான வாசுதேவ நாணயகார, விமல் வீரவன்ச, உதய கம்பன்வில போன்றவர்களும் அண்மைக் காலமாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உண்மையைப் பேசிய முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களை பதவியில் இருந்து விலக்கியுள்ளார்கள்.

இவ்வாறான சந்தர்பத்தில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காகச் செயற்பட வேண்டும். இதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.