மட்டு மாநகர சபையின் கட்டளைச் சட்டங்களை மீறி முதல்வரது வெளிநாட்டு பயணம் அமைந்துள்ளதனால் தன்னால் தொடர்ந்து பதில் கடமை ஆற்றமுடியாது என மட்டு மாநகர சபையின் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மட்டு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் வெளிநாடு செல்வதாகவும் அந்த வெளிநாட்டு பயணம் ஒரு உத்தியோகபூர்வமான பயணம் என்றும் கடிதத்தில் தான் வெளிநாட்டில் இருக்கும் காலத்தில் மட்டு மாநகர சபையின் பதில். கடமையை ஆற்றும் படியும் கடிதத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் 26 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் எனது கரங்களுக்கு 28-ம் தேதி மதியம் தான் கிடைத்தது. அதற்குரிய எந்த விதமான ஆவணங்களும் அந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை .
முதல்வர் இந்த பயணத்தின் போது மாநகர சபையின் கட்டளை சட்டங்களை மீறி செயல்பட்டு இருப்பதுடன். தான் விடுமுறையில் செல்வதாகவும் குறிப்பிட்டு அந்த கடிதத்தை தாமதமாக அனுப்பியதன் பின்புலம் என்ன. மட்டு மாநகர சபையின் நடைமுறைகளை முதல்வர் உரிய முறையில் கடைபிடிக்காமல் வெளிநாடு சென்றிருந்த சமயம் மாநகர சபையில் ஏதாவது அனர்த்தம் ஏற்பட்டு இருந்தால் இதற்கு யார் பொறுப்பு கூறுவது. அரச உடைமைகளை தவறாக பயன்படுத்துவது மிக வேதனையான விடயம்.
முதல்வர் அவர் குறிப்பிட்ட திகதி வரை என்னால் பதில் கடமை ஆற்ற முடியாதென தெரிவிக்கின்றேன். இவ்விடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் அவர்களுக்கும் மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் அவர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் இதற்குரிய பதில் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரை எனது பதில் கடமையை ஆற்ற முடியாது.
AR