யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது வரலாற்றுச் சாதனை என்று மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த வாரம் 17 வயதுப் பெண்ணுக்கு அவருடைய தாயார் சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருந்த நிலையில், அதற்குரிய சத்திர சிகிச்சை கடந்த 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
சத்திர சிகிச்சைக் கூடத்தில் 4 மணித்தியாலமாக நடைபெற்ற சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் அவரது பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று மைல்கல்.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தால் அதற்குரிய மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்க முடியும் என்றார்.
TL