மன்னாரில் நேற்றுமுன்தினம் காலை விசேட அதிரடிப்படையால் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டபோதும், நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அண்மையாகவுள்ள காணியிலிருந்து 4 கிராம் 54 மில்லி கிராம் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் காணியின் உரிமையாளர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணைகளை முன்னெடுத்த விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தாது விடுவித்துள்ளனர் தெரிவிக்கப்படுகின்றது.
AR