தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சூழல் நேய பசுமை வேலைத் திட்டம்” மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்போது நிழல் தரும் மரக் கன்றுகள் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிமனையில் உதவி பணிப்பாளர் திருமதி ஜேசுதாசன் கலாராணி தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இலங்கை தாய் திரு நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 3ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 9ஆம் திகதி வரை மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தில் சூழல் நேய பசுமை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளமையும், குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் இயற்கை மொழி அமைப்பின் தலைவி காயத்திரி உதயகுமார் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்ள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
AR