முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காஞ்சிரங்குடா பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு சிறு கடை ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டது.
முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சுமார் 75 ஆயிரம் ரூபா நிதி அனுசரணையில் குறித்த சில்லறக்கடை க்கான பொருட்கள் வாழங்கி திறந்துவைக்கப்பட்டது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த குறித்த குடும்பத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் மாணவி மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான செலவினை முன்னெடுப்பதற்காகவும் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் இவ் உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம் பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் முனைப்பு சுவிஸ் நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி குமாரசாமி முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவன செயலாளர் இ.குகநாதன் மற்றும் பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

AR