Tuesday, October 4, 2022

Latest Posts

குடாநாட்டுக் கடற்கரையில் கரைஒதுங்கிய உடலில் மேலும் சில தடயங்கள்

குடாநாட்டு கடலில் நவம்பர் மாதம் கரை ஒதுங்கிய உடல்களில் ஒன்றின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குற்றப்பட்டிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

வடமராட்சி மற்றும் தீவகம் பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல்  டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் கடற் கரைப் பிரதேசங்களில் ஆறு உடல்கள் கரை ஒதுங்கியிருந்தன.

இவ்வாறு கரை ஒதுங்கிய உடல்கள் இரு மாதங்களாக வைத்தியசாலையின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 உடல்கள் பருத்தித்துறை நீதிமன்ற அனுமதியின் பெயரில் தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உயிரிழந்த அனைவரும் 40 தொடக்கம் 50 வயதுவரை இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ள அதே நேரம் ஒருவரது வலது கையில் சிவலிங்கம் பச்சை குற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதன் மூலம் உரியவரை அடையாளம் காண முடியுமா என்பதற்காக பொலிசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேநேரம் இறந்தவர்களது மேலதிக பரிசோதனைகளிற்காக மாதிரி எலும்புகளும் பெறப்பட்டுள்ளன.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.