யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்காக கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழு யாழ்ப்பாணம் வந்துள்ளது.
இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 திடங்களிற்கு ஏலத்தல் விற்பனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்டனர்.
இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் சுமார் 100 அடி நீள படகு ஒன்றே அடைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த படகு சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு பயன்படுத்தக்கூடியது என கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதிக கரிசணை காண்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
TL