யாழ்ப்பாணம் காரைநகரில் வைத்து இன்று ஒரே நாளில் 135 இந்தியப் படகுகள் ஏலத்தில் விடப்பட்டன.
கொழும்பில் இருந்து வருகை தந்த மீன்பிடித் திசைக்கள அதிகாரிகள் குழுவின் முன்னையில் இன்று ஏலம் விடப்பட்டது. இதன்போது 68 பேர் ஆயிரம் ரூபா வீதம் செலுத்தி ஏலத்தில் பங்குகொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலத்திற்கான பணிகள் யாவும் மாலை 2 மணிக்கு நிறைவடைந்தன.
இதன்போது 135 படகுகளும் அதிக போட்டியின் மத்தியில் 2 மணி வரை ஏலமல இடப்பட்டது.
உட்சபட்சமாக ஒர் படகு 13 லட்சம் ரூபாவாக சென்றபோதும் 50ற்கும் மேற்பட்ட படகுகள் 12 ஆயிரம் ரூபாவிற்கே ஏலமிடப்பட்டது.
TL