இன்று, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் ஒருவர் 35 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வீட்டிற்கு பின்னால் உள்ள கோழிக்கூட்டுக்குள் இவ்வாறு கசிப்பு காய்ச்சும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
TL
