Tuesday, October 4, 2022

Latest Posts

இந்திய படகுகள் 52 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது

யாழ்ப்பாணம் காரைநகரில் வைத்து 135  இந்தியப் படகுகள் இன்று  ஏலத்தில் விடப்பட்டதில் 52  லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு  விற்பனை செய்யப்பட்டன.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில் 135 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே இன்று ஏலத்தில் விடப்பட்டன.

கொழும்பில் இருந்து வருகை தந்த மீன்பிடித் திசைக்கள  அதிகாரிகள் குழுவின் முன்னையில் இன்று ஏலம் விடப்பட்டது. இதன்போது 68 பேர் ஆயிரம் ரூபா வீதம் செலுத்தி ஏலத்தில் பங்குகொண்டனர்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலத்திற்கான பணிகள் யாவும் மாலை 2 மணிக்கு நிறைவடைந்தன.

இதன்போது 135  படகுகளும் 52  லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டன. இவற்றில் உட்ச பட்சமாக ஓர் படகு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேநேரம் காங்கேசன்துறையில் உள்ள 8 படகுகள் நாளை ஏலம் விடப்படவுள்ளது. 

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.