Tuesday, October 4, 2022

Latest Posts

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித்த பி. வனிகசிங்க நியமனம் 

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க கிழக்கு மாகாண பிரதம செயலாளராக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

துசித்த பி. வனிகசிங்க கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன் அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

கடந்த வாரத்தில் கிழக்குமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மட்டக்களப்பில் வைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AR

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.