Tuesday, October 4, 2022

Latest Posts

ஏலப்பணத்தை வழங்குகின்றோம் எமது படகினை தாருங்கள்- இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை

இலங்கையில் ஏலம் விட்ட படகிற்காக 55 லட்சம் ரூபாவினை செலுத்த தயாராகவுள்ளோம் அவற்றினை எம்மிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என இராமேஸ்வரம் இழுவைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் யேசுராயா கோரிக்கை விடுத்தார்.

தமிழக மீனவர்களின் 105படகுகள் 2018ஆம் ஆண்டிற்கு முன்பு இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டபோதும் அவை இலங்கை நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட படகுகள் அவற்றினை நாம் நேரில் சென்று பார்த்தபோது உடனடியாக எடுத்து வரமுடியாத நிலமையில் காணப்பட்டது. இதனால் அவை தொடர்பில் ஆராய்ந்தபோது கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிட்டது.

இருந்தபோதும் தற்போது 2020ஆம் ஆண்டுவரையில் கைப்பற்றப்பட்ட படகுகளையும் சேர்த்தே இலங்கை அரசு ஏலம் விடுகின்றது. இதே இலங்கை அரசிடம் எம்மை விடவும் அதிகம் துன்பப்பட்டவர்களான ஈழத் தமிழர்கள் இன்று எமக்கு ஏற்படும் துன்பைத்தை கண்டுகொள்ளாமை வருத்தமளிக்கின்றது.

இலங்கையில் அகப்பட்டுள்ள 200 படகுகளில் நூற்றிற்கும் மேற்பட்ட படகு உரிமையாளர்கள் சிறுவயது முதலே மீனவனாக இருந்து சிறுகச் சிறுக சேமித்து மிகுதியை கடன்வாங்கியே இந்த படகுகளை வாங்கினான் இன்று அவன் தான் பெத்த பிள்ளைக்கே உணவளிக்க முடியாமல் தவிக்கின்றான்.

இதேநேரம் இலங்கை படையினர் தமது தேவை முடிந்த பின்பு இதே ஈழத் தமிழர்களை மீண்டும். இரட்டியடிப்பர் அப்போது இதே இந்திய மீனவனே கைகொடுப்பான் நாம் எட்டி உதைக்க மாட்டோம் மாறாக இரு கரம் கொடுத்து வரவேற்கும்போது முகத்தில் ஈழத்தமிழர்கள் இன்று எமக்கு முதுகில் குத்தும் வலியின் வேதனையை புரிந்துகொள்வர் என்றார்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.