Tuesday, October 4, 2022

Latest Posts

இன்று 5 படகு 4,31,500 ரூபாவிற்கு ஏலம்

காங்கேசன்துறையில் இருந்த 5 இந்தியப் படகுகளும் இன்று 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலமிடப்பட்டது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த சமயம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் நேற்று முதல் ஏலம் விடப்படுகின்றன.

இதற்கமைய இன்று காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் தரித்து வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் ஏலம் விடப்பட்டது. இதன்போதே இந்த ஐந்து படகுகளும் 4 லட்சத்து  31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலமிடப்பட்டது.

இதேநேரம் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில் உள்ள 14  படகுகள் ஏலம் விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.