Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

“தேயிலைச் சாயம்”புகைப்படக் கண்காட்சி

“தேயிலைச் சாயம்”புகைப்படக் கண்காட்சி இம்மாதம் 17,18 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் .க் கண்காட்சியை காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையில் பார்வையிடமுடியும். இதன் அரம்ப நிகழ்வு 17ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது.

கொவிட் -19 நிலவரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி ஆரம்ப நிகழ்வு நடைபேறுவதுடன், பார்வையிடுவோரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினூடாக மலையக தமிழ் இளைஞர் யுவதிகளைத் தெரிவு செய்து அவர்களின் தொழில் துறை சார்ந்த திறனை ஊக்குவிக்கும் முகமாக 2019 ஆண்டு முதல் புகைப்படக் கலை தொடர்பான பயிற்றுவிப்பு நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் தலவாக்கலை பிரதேசத்தில் ஹொலிரூட் மற்றும் லோகி ஆகிய தோட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவ்விரு தோட்ட இளைஞர் யுவதிகளைப் பங்குபெறச்செய்து, புகைப்படக் கலை தொடர்பான சித்தாந்தம் மற்றும் பிரயோக ரீதியாக புகைப்படக் கலையைப் பயன்படுத்தும் விதம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சிகளின் பின்னர், அவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களைப் பிரதானமாகக் கொண்டு “தேயிலை சாயம்” எனும் பெயரில் மலையக மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலான கண்காட்சியானது நடத்தப்படுகிறது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நல்லாட்சிக்கான அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் பிரஜைகளின் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன் இலங்கைப் பிரஜைகள் மற்றும் அரச துறையுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுகின்ற நிறுவனமாகும்.

சட்டங்கள், துணைச்சட்டங்கள் மற்றும் உரிமைகள் போன்ற வெவ்வேறு துறைகள் ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான பங்களிப்புகளைச் செய்துவருகிறது.

AR

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.