Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

மட்டக்களப்பில் “தேயிலைச் சாயம்”புகைப்படக் கண்காட்சி

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் “தேயிலைச் சாயம்”புகைப்படக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியானது இன்று (17) மற்றும் நாளை (18) காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையில் இடம்பெறுகின்றது.

கொவிட் -19 நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி இவ்ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதுடன், கண்காட்சியினைப் பார்வையிட வருவோரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினூடாக மலையக தமிழ் இளைஞர் யுவதிகளைத் தெரிவு செய்து அவர்களின் தொழில் துறை சார்ந்த திறனை ஊக்குவிக்கும் முகமாக 2019 ஆண்டு முதல் புகைப்படக் கலை தொடர்பான பயிற்றுவிப்பு நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் தலவாக்கலை பிரதேசத்தில் ஹொலிரூட் மற்றும் லோகி ஆகிய தோட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவ்விரு தோட்ட இளைஞர் யுவதிகளைப் பங்குபெறச்செய்து, புகைப்படக் கலை தொடர்பான சித்தாந்தம் மற்றும் பிரயோக ரீதியாக புகைப்படக் கலையைப் பயன்படுத்தும் விதம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சிகளின் பின்னர், அவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களைப் பிரதானமாகக் கொண்டு “தேயிலை சாயம்” எனும் பெயரில் மலையக மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலேயே இக்கண்காட்சி செயற்பபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

AR

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.