கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கா இன்றைய தினம் யாழ்ப்பாணம் மநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார்.
சிநேக பூர்வ விஜயத்தில் கொழும்பு மாநகர முதல்வரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் வரவேற்றார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதான நூலகம் 1959ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காலம் முதல் இன்றைய வரையான வரலாற்றையும் தெரிவித்து நூலகத்தின் தற்போதைய பணிகளை நேரில் காண்பித்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் பிரதி முதல்வருடன் மாநகர ஆணையாளர் ரி.ஜெயசீலனும் உடன் இருந்து கொழும்பில் இருந்து வந்தவர்களிற்கு வழிகாட்டினார்.
TL






