நேற்று (02) 11 சிறிய அரசாங்கக் கட்சிகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரு உறுப்பினர்கள் தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“முழு நாடும் சரியான பாதையில்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களை அங்கீகரிக்க முடியாது எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தை விமர்சித்து இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று குழுவில் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்