Wednesday, March 29, 2023

Latest Posts

மட்டக்களப்பில் மின் தகனசாலை திறப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையின் செயற்பாடுகள் (15) மாநகர ஆணையாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக அவசிய தேவையாக காணப்படும் மின் தகனசாலையினை அமைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்டசபை தீர்மானத்துக்கு அமைய கள்ளியங்காடு இந்து மயான வளாகத்தில் குறித்த மின் தகன சாலையினை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் ரூபா 40 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகன சாலையின் செயற்பாடுகளை இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களின் அவசர, அவசிய தேவை கருதி தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதம கணக்காளர் திருமதி.ஹெலன் சிவராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் ஓய்வுநிலை பொறியியலாளர் எந்திரி தேவதீபன், மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர்.சி.துஷ்யந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கிரிஜா பிரேம்குமார், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான திருமதி.ஜெயகௌரி ஜெயராஜன், எஸ்.சுதர்சன் ஆகியோருடன் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி மின் தகனசாலையானது இலங்கையில் மிக உயர்ந்த புகை சீராக்கியுடன், அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு சுற்று சூழல் பாதுகாப்பு அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

AR

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.