கிளிநொச்சியில் அமையவுள்ள சீமேந்து தொழிற்சாலை தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகமான சிறீதர் தியட்டரில் காலை 8.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் திருகோணமலை டோக்கியோ சீமேந்து தொழிற்சாலை அதிகாரிகள், பூநகரி பிரதேச செயலாளர் ஆகியோருடன் கிளிநொச்சி வேரவில், வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
வேரவிலில் சீமேந்து தொழிற்சாலை அமைப்பது தொடர்பில. கடந்த இரு ஆண்டுகளாக பேச்சு அடிபடும் அதேநேரம் அண்மையில்
பொன்னாவெளியில் முருகக்கல் அகழ முற்பட்ட சமயம் அப்பகுதி மீனவ அமைப்புக்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த சர்ச்சைகள் தொடர்பாக ஆராய இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
AR