யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் போசாக்கு இன்மை காரணமாக 53 நாள் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
வடமராட்சி கிழக்கு, குடத்தனையைச் சேர்ந்த 53 நாளான குழந்தை ஒன்று கடந்த திங்கள் கிழமை மயக்கமுற்றதனால் உடனடியாக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் மறுநாள் செவ்வாய்க் கிழமை குழந்தை உயிரிழந்தது.
உயிரிழந்த குழந்தையின் மரண விசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரியான திருமதி.அன்ரலா வின்சன்தயான் குழந்தையின் உடலை உடல்கூராய்வு பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.
இதற்கமைய குழந்தையின் உடலம் உணல்கூராய்விற்கு உட்படுத்தப்பட்டபோது குழந்தையின் மரணத்திற்கு போசாக்கின்மையே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
TL