ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம், மார்.17
கிளிநொச்சியில் அமையவுள்ள சீமேந்து தொழிற்சாலை அமையவுள்ள பகுதியில் இடம்பெறும் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகமான சிறீதர் தியட்டரில் நேற்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் திருகோணமலை டோக்கியோ சீமேந்து தொழிற்சாலை அதிகாரிகள், பூநகரி பிரதேச செயலாளர் மற்றும. நீ்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் கிளிநொச்சி வேரவில், வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது வேரவிலில் சீமேந்து தொழிற்சாலை அமைப்பதற்கான முன் ஏற்பாடுகளும்
பொன்னாவெளியில் முருகக்கல் அகழ்விற்கான கணியவள கூட்டுத்தாபனத்தின் அனுமதியை மட்டும் பெற்றுக்கொண்டு உள்ளூர் திணைக்களங்களோ கரையோர சுற்றுச் சூழல் அதிகார சபை மட்டுமன்றி மாவட்டச் செயலக அனுமதிகூட பெறப்படவில்லை எனவும் பெரும் திட்டங்களாயின் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டிய சுற்றாடல் தொடர்பான தாக்க மதிப்பீடல் அறிக்கை என்பன காண்பிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் காரணமாகவே அப்பகுதி மீனவ அமைப்புக்களும் பிரதேச மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சர்ச்சைகள் தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் சகல தரப்பையும் உள்ளடக்கி ஆராய்ந்து முடிவு எட்டும்வரை அகழ்வில் ஈடுபட வேண்டாம் எனவும் இரு வாரங்களில் சந்திப்பிற்கு ஏறபாடு செயவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
TL