முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாவற்குழியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரைக்கு இன்று மாலை 3 மணிக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகை தரவிருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது நாவற்குழு விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரப்பின் அடையாளம், சவேந்திர சில்வா போர் குற்றவாளி, இனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா வெளியேறு,தமிழ் இனப் படுகொலையாளி சவேந்திர சில்வா வெளியேறு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கி நின்றனர்.

இதன்போது விகாரைக்கு வருகை தந்த சவேந்திர சில்வா விகாரையின் மண்டப கலசத் திறப்பு விழாவில் பங்கு கொண்டு கலசத்தை திறந்து வைத்து சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார். இந் நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பெருமளவு பௌத்த துறவிகளும் பங்குகொண்டனர்.
TL