முஸ்லிம் சமூகத்தில் இனவாதம் மற்றும் பின்தங்கிய நிலைக்கு எதிராக ஒன்றரை தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சமூக ஊடக செயற்பாடுகளை இனியும் பேண முடியாத அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட செயலை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஐந்து மாத சிறைத்தண்டனை பெற்ற எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்பு நான் எழுதியதை இப்போது என்னால் எழுத முடியாது. நான் நிறைய சிந்திக்க வேண்டும்.”
சுதந்திர சிந்தனையுள்ள எழுத்தாளரும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியுமான ரம்சி ராசிக் மார்ச் 23ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ரைட்டு லைஃப் மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “ICCPR பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகம்” ஆய்வு வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லீம் சமூகத்தை ஒடுக்கும் இனவாதத்தை புறந்தள்ளி “சித்தாந்த ஜிகாத் (போராட்டம்)” செய்யப்பட வேண்டும் என 2020 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அவர் வெளியிட்ட பதிவின் அடிப்படையில், ஏப்ரல் 9, 2020 அன்று, ரம்சி ராசிக் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்
அவர் குறித்த பதிவை இட்டு, இரண்டு நாட்களுக்குப் பின்னர், அவர் அந்தப் பதிவை மீள் பதிவு செய்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு முன்னர் இடப்பட்ட பதிவை தவறாகப் புரிந்து கொண்ட பலர் அவர் இனவாதக் கருத்துக்களை விதைப்பதாக குற்றம் சாட்டி அவரை சிறையில் அடைக்க வேண்டும் என் கிளர்ந்தெழுந்தனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ICCPR) பயன்படுத்தி 161 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மற்றும் வெகுஜன ஊடகங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் சமூக ஆர்வலராக பணியாற்றியவர் ரம்சி ராசிக்கிற்கு செப்டெம்பர் 17, 2020 பிணை வழங்கிய வழங்கிய கொழும்பு உயர் நீதிமன்றம், ஒரு நாட்டின் சட்டங்கள் தனிநபர்கள் தங்கள் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை பாதுகாக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.
பேஸ்புக் பதிவின் அடிப்படையில் ஏப்ரல் 9, 2020 அன்று கட்டுகஸ்தோட்டை
பொல்கஸ்தெனியவில் அமைந்துள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட ரம்சி ராசிக்கிற்கு பிணை வழங்குவதற்கு சிபாரிசு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே, தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்ட விதிகளை பயன்படுத்துவது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கவனத்திற்கு கொண்டுவந்தது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போன்று தொடர்ந்தும் செயற்பட்டால் அது மனித உரிமைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ரம்சே ராசிக் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒரு மதத்தை நம்புவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த மதத்தை விமர்சிக்க மற்றவர்களுக்கும் உரிமை இருக்க வேண்டுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“ஒருவர் ஒரு மதத்தை நம்புகிறார் என்பதற்காக அந்த மதத்தை விமர்சிக்க இன்னொருவருக்கு உரிமை இல்லையென அர்த்தம் இல்லை. ஒருவருக்கு அந்த உரிமை இருக்கிறது.”
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய சுதந்திர சிந்தனையுள்ள எழுத்தாளர் ரம்சி ராசிக், முழுமையான மனித உரிமைகள் மற்றும் முழுமையான பேச்சு சுதந்திரத்திற்காக ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.
AR