நாகர்கோவில் மேற்கில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு இன்று அதிகாலை இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் 28.03.2023 இன்று அதிகாலை 5 மணியளவில் நாகர் கோவில் மேற்கு, நாகர் கோவிலைச் சேர்ந்த லோகஸ் மரியதாஸ் என்பவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கே இவ்வாறு யாரோ தீ வைத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்தினால் கடைக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகாதபோதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் இதனை செய்தவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TL