எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தலொன்று நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். எந்தத்தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தமது கட்சி தயார் எனவும் அவர் கூறினார்.
அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டவாறு கூறினார்.
தமதும், தமது கட்சியினதும் அரசியல் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன எனவும், பிரிந்து சென்றவர்கள் எதிர்காலத்தில் இணையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
TL