நாவலர் கலாசார மண்டபத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து யாழ். மாநகரசபையை உடனடியாக வெளியேறுமாறு ஆளுநர் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிய விடயத்தைச் சாட்டாக வைத்து யாழ். மாநகரசபை ஆணையாளர் மீது உள்ளக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. விசாரணைகளின் முடிவில் ஆணையாளரை அங்கிருந்து இடமாற்றும் உத்தரவொன்று வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாவலர் கலாசார மண்டபத்தின் நிர்வாக நடவடிக்கைகளை யாழ். மாநகரசபையிடமிருந்து பறித்து, இந்து கலாசாரத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. சத்தஞ் சந்தடி இல்லாமல் நகர்த்தப்பட்ட திணைக்கள ரீதியான ஒரு உள்ளகத் தொடர்பாடல் யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஒரு சிலர் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டமையால், ஆணையாளர் மீது ஆளுநர் விசனமடைந்திருப்பதாகவும், இது குறித்து விசாரித்து, தனக்கு அறிக்கையிடுமாறு அவர் தனது அதிகாரிகளைப் பணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
TL