Monday, June 5, 2023

Latest Posts

சிற்றுண்டி 40/= ரூபாய் – சம்மாந்துறையில் தீர்மானம்

சம்மாந்துறையில் புனித நோன்பு காலத்தில் சிற்றூண்டிகளின் விலை மற்றும் உணவுகளின் தரம், பாதுகாப்பு தொடர்பாக தேனீர்சாலை உரிமையாளர்களுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

அதிகமதிகம் நன்மைகளை சேகரிக்க வேண்டிய இந்த மாதத்தில் நியாயமான விலைகளில் சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் தயாரித்த உணவுகளை மக்களுக்கு வழங்க உணவகங்கள் முன்வர வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்கள் தேனீர்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்போது தேனீர்சாலை உரிமையாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் பின்னர் தரமான உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும் சம்ஸா, பெட்டிஸ், றோல்ஸ், கட்லட், ஜம்பர், மரக்கறி றொட்டி ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையாக ரூபாய் 40 (நாற்பது) வாக விற்பனை செய்வதுடன் இருப்பினும் முட்டை உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுடன், சிற்றுண்டிச்சாலைகளில் குறித்த உணவுப் பொருட்களின் விலை பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே.றம்சின் காரியப்பர், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரனை அதிகாரி ஏ.ஏ.அஹம்மட் சர்பான், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் பீ.வரதராஜன், மாவட்ட மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், சம்மாந்துறை பிரதேச செயலக கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.தாஸிம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சம்மாந்துறை வர்த்தக மற்றும் தொழில்கள் சம்மேளனம் தலைவர் ஏ.ஹக்கீம், செயலாளர் எம்.எச்.எம்.ஹாரிஸ், சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் செயலாளர் டி.எல்.கபீர், தேனீர்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

AR

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.