வருமான வரியை நீக்க இரண்டு வழிகளே உள்ளன!

0
295

சர்வதேச நாணய நிதியத்திற்கு 16 தடவைகள் சென்ற போதும் சில நிபந்தனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாததால் வெற்றிபெற முடியவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு 16 தடவைகள் சென்ற போதும் சில நிபந்தனைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் வெற்றிபெற முடியவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் வரி உயர்வு செய்யப்பட்டது. இப்போது செய்துகொண்ட ஒப்பந்தங்களை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. வரி தொகுப்பை அகற்ற இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அதிக மக்களை ளிடம் வரி வசூலிப்பது. இரண்டாவது வழி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது. இவை இரண்டையும் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது.

தனியார் துறையினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், மக்கள் நிம்மதி அடையலாம். அதிக வருமானம் ஈட்டுபவர்கள் தான் வரி செலுத்த முடியாதென கூறுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here