உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான அடிப்படை சம்பளம் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வரவு வைக்கப்படும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
புத்தாண்டு பிறப்பதால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
N.S
